சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற மாநில சட்டப் பேரவைகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணைப்படி, சட்டம்- ஒழுங்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சூதாட்டத்தை தடுக்க சட்டமியற்ற சட்டப் பேரவைகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.
அந்த வகையில், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது மாநில போலீசார் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.