பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ்க்கு சென்றார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும், முதல் முறையாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்தனர். இதன்மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றார்.
முன்னதாக போர்ட் லூயிஸில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிவில் சர்வீஸ் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேலும், பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரினை போர்ட் லூயிஸில் உள்ள கங்கா தலாவ் ஆற்றில் பிரதமர் மோடி ஊற்றினார். மேலும் ஆரத்தி எடுத்து பிரதமர் வழிபட்டார்.