தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீய சக்திகளை வேரறுப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர்,
“NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500-க்கு மேல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், தமிழக மக்களுக்கு பாஜக அரசு நல்லாட்சியை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்கள் அனைவரும் புதிய கல்விக் கொள்கை வேண்டும் என கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றும் அவர் சாடினார்.
2026-ல் தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற வெறியோடு வாக்களியுங்கள் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.