ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன் கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் பூபேந்திர ஹூடாவின் கோட்டையான ரோஹ்தக் உட்பட 9 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. மேலும், ஒரு மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.