திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர் அருகே பாண்டிச்சேரி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலந்தாங்கள் பகுதியில் கிடந்த பாண்டிச்சேரி ரவுடியான ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரவுடி ஐயப்பன் 6 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், ஒன்றரை லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.