முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த தனது 8 சவரன் தங்க நகை திருடு போனதாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், கூகுள் பே மூலமாக பாபுவிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு அளித்த நிலையில், சுப்ரமணியன் மீது மக்கள் மன்றத்தில் பாபு புகார் அளித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.