திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலியம்பேடு ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதை கண்டித்து அப்பகுதியினர் பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.