காஞ்சிபுரம் அருகே ஆன்லை ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒன்றாம் தேதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராஜாமணி என்பவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பைக்கில் வந்த இளைஞர் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், திருமால் என்பவரை கைது செய்தனர். ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க யூடியூப் பார்த்து நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிவந்துள்ளது.