டெல்லி மகிபால்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில் இங்கிலாந்து பெண்ணை அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக ஊடகம் மூலமாக டெல்லியை சேர்ந்த நபர் ஒருவருடன் பழகியுள்ளார். பின்னர் அவரை சந்திப்பதற்காக, டெல்லி மகிபால்பூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றபோது அப்பெண்ணை ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்புவதற்காக லிப்ட்டில் ஏறிய பெண்ணுக்கு, மற்றொரு நபர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.