கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு நடைபெற்ற பொங்கல் வழிபாட்டில் தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
கோயிலில் குவிந்த பெண்கள் பாரம்பரிய உடை அணிந்துகொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் தீபம் எடுத்துவந்து கோயிலின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அடுப்பில் பற்ற வைத்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.
பகவதி அம்மன் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.