கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான உரிமையாளர்களுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால், சாலை ஓரங்களில் காரை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும்போது அதற்கான பார்க்கிங் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான, சான்றை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு வந்த பின், புதிய வாகனத்தை பதிவு செய்யும்போது பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.