இந்திய கடற்படையில் ஆண்டுதோறும் பெண்களின் வருகை அதிகரித்து வருவதாக கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் பணிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலோர மாநிலங்களில் விழிப்புணர்வு கார் பேரணி நடைபெறுகிறது.
கடந்த 3ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய கார் பேரணி, 6 மாநிலங்களை கடந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள இந்திய கடற்படை தளம் வந்தடைந்தது. சென்னை வந்தடைந்த 56 பேர் கொண்ட குழுவினருக்கு கடற்படை வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு கடற்படை கமாண்டோ சலூஜா சிங், இந்திய கடற்படையில் எவ்வாறு பணிக்கு சேர்வது, உயர் அதிகாரிகளுக்கான தேர்வுகளை எப்படி எழுதுவது என்பது குறித்து கார் பேரணி மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.