சேலம் முத்துநாயக்கன்பட்டி அருகே உயர்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை செய்ய சென்ற பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முத்துநாயக்கன்பட்டி அருகேயுள்ள உயர்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வுக்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ அருள், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய தொடர் முயற்சியால் மேற்கொள்ளப்படும் பணியில் பங்கேற்க தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இதுகுறித்து முதலமைச்சரிடம் நீதி கேட்க உள்ளதாக தெரிவித்தார்.