நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் மீது திரைப்பட நடிகை அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர், அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.
சீமானின வீட்டு வாசலில் ஒட்டிய சம்மனை வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் முன்னாள் ராணுவ வீரரான பாதுகாவலர் அமல்ராஜ் கிழித்ததாக புகார் எழுந்தது. மேலும், போலீசாரை தாக்க முயன்றதாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும் ஜாமின் கோரிய மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,
ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், சீமான் வீட்டு பணியாளர் உட்பட இருவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.