சென்னை வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தைப் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அவரை நிர்வாக ஆசிரியர் தில்லை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலை சால்வை அணிவித்து நிர்வாக இயக்குநர் மது வரவேற்பு அளித்தார்.
தொடர்ந்து பின்னர், தமிழ் ஜனம் தொலைக்காட்சி அரங்கம் மற்றும் செய்தி அறையை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், செய்திப் பிரிவினருடன் கலந்துரையாடினார். அவருக்கு தமிழ் ஜனம் ஊழியர்கள் ஹோலி வாழ்த்து தெரிவித்தனர்.