புதுச்சேரியில் பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிய மத போதகரை, சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி திருக்கனூர் கிராமத்தை சேர்ந்த பெண், முன்பின் தெரியாத நபரிடம் இருந்து தனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வருவதாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இம்மானுவேல் என்பவரை கைது செய்தனர். கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக இருப்பதாகவும், மகாபலிபுரத்தில் நடந்த கூட்டத்தின் போது அந்தப் பெண்ணிடம் இருந்து மொபைல் எண்ணை இம்மானுவேல் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இமானுவேலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவரை காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.