சிம்பொனி அரங்கேற்றத்தை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா தான் இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கள் இசை தொகுப்பான, ‘வேலியன்ட்’ சிம்பொனியை, லண்டனில் அரங்கேற்றம் செய்தார். இதையடுத்து அவருக்கு இசைக் கலைஞர்களும், பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத மிகப்பெரிய சாதனையை இளையராஜா செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார். சிம்பொனியை அரங்கேற்றம் செய்ததன் மூலமாக இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை இளையராஜா பிடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.