சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் கடந்த 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. சமக்கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தில், தமிழக மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான கல்வியை வலியுறுத்தும் சமக்கல்வி கையெழுத்து இயக்கத்துக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதாக கூறியுள்ளார்.