தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரும், பயணியும் சண்டை போட்டு கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பயணி ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து உள்ளார். இதனை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பயணியிடம் அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளார்.
அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் மாறி மாறி பயணிகள் முன்னிலையிலே சண்டை போட்டதோடு, நடைமேடையில் இருந்த கடையின் பொருட்களையும் சேதப்படுத்தினர்.
பின்னர் இருவரும் சமாதானம் ஆன நிலையில் பயணி அபராத தொகையை செலுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.