சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன் என்பவர் டுடோரியல் கல்லூரியும், நீட் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 10 மொழிகளை கற்று மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த கருத்தை, இவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், தமிழக அரசின் இரட்டை வேடத்தையும் சுட்டிக்காட்டியும் இருந்தார்.
இதன் காரணமாக,கலிக கண்ணன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர் கைது செய்யபட்டது, அவரிடம் பயிலும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.