சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்காவும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடலூரில் 250 கோடி ரூபாய் முதலீட்டில், 2 காலணி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.
திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழில்பூங்கா நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
















