கோவை மாவட்டம் பீளமேடு அருகே பொது மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாங்குறிச்சி சாலையில் உள்ள பொது மயானத்தை பீளமேடு, காந்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மயானத்தில் குழிகள் தோண்டப்பட்டு மக்கிய மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மயானத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் குற்றம் சாட்டினர்.