தமிழகம் முழுவதும் வேளாண் பட்ஜெட்டை LED திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டாததால், இருக்கைகள் காலியாக இருந்தன.
வேளாண் பட்ஜெட் தாக்கலை பொதுமக்கள் காண, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் பட்ஜெட் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அதைக் காண மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இருக்கைகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன.