நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர் சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது காட்டு யானைகள் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.
பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக யானைகள் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, சாலையில் உலா வரும் காட்டு யானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யும் செயலில் ஈடுபடக் கூடாதென்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.