உலக PI தினத்தையொட்டி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நான்கு விதமான வடிவங்களில் நின்று சாதனை படைத்தனர்.
ஆண்டுந்தோறும் மார்ச் மாதம் 14-ம் தேதி, உலக பை (π) தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கணிதத்துறையில் பயின்று வரும் 395 மாணவிகள் இணைந்து, கணித குறியீடான பை வடிவிலும், நாள் மற்றும் நாள் மற்றும் மாதத்தை குறிக்கும் வகையிலும், கல்லூரியின் பெயரை குறிக்கும் வகையிலும் என 4 வடிவங்களில் நின்று அசத்தினர்.