சேலம் அருகே தகாத உறவால் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு இளைஞர் தனது கையை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கும், சேலம் கணவாய் காடு பகுதியைச் சேர்ந்த வேடராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளம்பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு, தனது கையை வேடராஜ் அறுத்துக்கொண்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய இளைஞரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.