பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தேனியில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
திமுகவுக்கு எதிரான வசனங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கம் எழுப்பியும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
















