காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், சதாசிவம் ஆகியோர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்களின் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.