நெல்லை மாவட்டம் சித்தூர் செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.
கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளித்தபடியே செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.