கர்நாடகாவில் ஹோலி பண்டிகையின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ரசாயன வண்ணப் பொடி பூசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் பள்ளி மாணவிகள் சிலர் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், ஹோலி பண்டிகையை காரணம் காட்டி மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடியை வீசியும், பூசியும் சென்றுள்ளனர்.
இதில் மூச்சுத்திணறல், சரும எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட 7 மாணவிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.