பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபெரோஷாபாத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணியாற்றி வந்த ரவீந்திர குமார், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பெண் ஏஜெண்டிடம் முக்கிய ரகசியங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
பெண் உளவாளி, ரவீந்திர குமாரை ஹனி டிராப் செய்து அவரது வலையில் வீழ்த்திய நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனில் இருந்து பல முக்கிய ரகசியங்கள் கசிந்துள்ளது தெரியவந்த நிலையில் தொடர் விசாரணை நடந்து வருகிறது.