செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஹைபர் லூப் சோதனை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைபர் லூப் தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தையூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் இதன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு சென்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஹைபர் லூப் சோதனை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.