இந்தியா வரும் 2028-க்குள் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மோர்கன் ஸ்டான்லி நிதிச்சேவை நிறுவனம், அண்மையில் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில், வரும் 2028-க்குள் இந்தியா ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 5 புள்ளி 7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3-வது பொருளாதார நாடாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நடப்பாண்டில் இந்திய பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.