உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு பெரும் பங்காற்றிய இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக நீடித்து வந்த ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திய இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் சீ சின் பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.