திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே மர்ம பொருளை கடித்த வளர்ப்பு நாய் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லவன் நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் என்பவரது வளர்ப்பு நாய் மர்ம பொருள் ஒன்றை கடித்தது. அப்போது பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் நாயின் வாய் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவலளித்த நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.