டாஸ்மாக் நிர்வாக ஊழல் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தனித்தனியாக விளையாடி வருகின்றனர். முதலில் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில் அந்தியூர் அணி முதலிடத்தையும், மதுரை அணி 2வது இடத்தையும் பிடித்து அசத்தின. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், டாஸ்மாக் மூலமாக தமிழக அரசுக்கு வருடந்தோறும் செல்லும் 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் என்ன ஆகிறது என்பது தெரியவில்லை என கூறினார். டாஸ்மாக் ஊழல் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.