தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் என தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை கிடையாது என்றும், டாஸ்மாக் ஊழலை மறைக்கவே மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளை தமிழக முதல்வர் உருவாக்குவதாகவும் கூறினார்.
மேலும், நடிகர் விஜய்க்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததால், மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.