திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
முகமூடி அணிந்தபடி வந்த நபர்கள் வீடுகளை நோட்டமிட்டதுடன் ஜன்னல்களைத் திறந்து பார்த்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய நல்லூர் காவல்நிலைய போலீசார், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து மீளாத நிலையில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விநாயகம் நேரடியாக சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.