ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வட மாநிலங்களை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை அருகே உள்ள பனிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த பிட்டு குமார், ஜாகீர் ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.