சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தின் உதிரி பாகம் விழுந்து மாணவி படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கானத்தூர் பகுதியில் உள்ள MGM தனியார் பொழுபோக்கு பூங்காவிற்கு கடந்த 13ஆம் தேதி 50 கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். பூங்காவில் உள்ள ராட்சத தாலாட்டு ராட்டினத்தில் மாணவிகள் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் உதிரி பாகம் ஒரு மாணவி மீது விழுந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவி மீது ராட்டினத்தின் உதிரி பாகம் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.