வடகொரிய அதிபருடன் நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான உறவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நல்ல நட்புறவில் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அதிக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக வடகொரியா திகழ்வதாகவும், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.