உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அவர்களை உயிரோடு விடுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீட்டால் முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் உடன்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு, தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் மட்டுமே அவர்களை உயிரோடு விடுவோம் எனவும் அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.