‘டெஸ்ட்’ திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சஷிகாந்த் எழுதி, இயக்கியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தில், சித்தார்த், மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 4-ம் தேதி ‘டெஸ்ட்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
















