41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் பயணிக்க தடை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அமெரிக்கா வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை மூலம், இந்த செய்தியை பிரபல ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.