புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கும் நிகழ்வை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பாத்திரங்கள், மிக்சி, குக்கர் போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.