சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து ரசிகர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.