திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடம் தரைமட்டமானது.
வளையங்காடு பகுதியை சேர்ந்த இளங்கோ, பனியன் நிறுவனம் நடத்தி வந்ததுடன் நிறுவனத்தின் பின்புறமே, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
வழக்கம்போல பணி முடிந்து நிறுவனத்தை அடைத்துவிட்டு தனது வீட்டில் உறங்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்தது. இதனால், உடனடியாக குடும்பத்துடன் வீட்டிலிருந்து அவர் வெளியேறிய நிலையில், வீட்டிலிருந்த சிலிண்டர் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அவரது வீடு மற்றும் பனியன் கம்பெனி இடிந்து தரைமட்டமாகின. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.