இண்டி கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது என்றும், சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல என்றும் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் காரத், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் இண்டி கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது என்று கூறினார். இந்த தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.