சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு வீடு புகுந்து பாஜக நகர செயலாளரை காவல்துறை கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.