சைபர் க்ரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பேரணி நடைபெற்றது.
இதில், டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு, சைபர் குற்றங்களில் சிக்காமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.